மனைவிக்கு குழந்தை இல்லை! தாம்பத்ய உறவுக்காக ஆயுள் கைதிக்கு 15 நாள் பரோல்! நீதிமன்றம் பரபர உத்தரவு! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, April 9, 2022

மனைவிக்கு குழந்தை இல்லை! தாம்பத்ய உறவுக்காக ஆயுள் கைதிக்கு 15 நாள் பரோல்! நீதிமன்றம் பரபர உத்தரவு!

 

அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிக்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தாம்பத்திய உறவு மூலம் குழந்தை பெற்று கொள்ள அவரது மனைவி அனுமதி கேட்டநிலையில் கைதிக்கு நீதிமன்றம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தலால் (வயது 34). திருமணமான நிலையில் 2018 ல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மனைவி மனு இதற்கிடையே கணவருடன் தாம்பத்ய உறவில் ஈடுபடவும், குழந்தை பெற்றுக்கொள்ள தான் விரும்புவதாகவும், தனது கணவருக்கு பரோல் வழங்க வேண்டும் எனவும் அவரது மனைவி அஜ்மீர் கலெக்டரிடம் மனு மூலம் கோரிக்கை வைத்தார். கடந்த டிசம்பர் மாதம் மனு அளிக்கப்பட்ட நிலையில் அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
கணவருக்கு பரோல் இதையடுத்து மனைவி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சந்தீப் மேக்தா, பர்சாந்த் அலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நந்தலாலின் மனைவியின் கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் அவருக்கு 15 நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.

நீதிமன்றம் கூறியது என்ன இந்த உத்தரவின்போது நீதிமன்றம் இலக்கியம், மதம்சார்ந்த விஷயங்களையும், பிற நீதிமன்ற தீர்ப்புகளையும் மேற்கொள் காட்டியிருந்தது. அதாவது சிறையில் உள்ள ஆயுள் கைதியின் மனைவி குழந்தை பெற்று கொள்ள உரிமை உள்ளது. அவர் எந்த குற்றங்களையும் செய்யவில்லை. தண்டனையை காரணம் காட்டி அவரது மனைவியை விருப்பத்தை தடுப்பது அவரது உரிமையை பறிப்பதோடு, அவரை மோசமாக பாதிக்கும். இந்து கிறிஸ்தவம், இஸ்லாம் என அனைத்து மதங்களுக்கு தாம்பத்தியம், வாரிசுகள், இல்லறம் குறித்து கூறியுள்ளன. இலக்கியங்களிலும் இது தொடர்பான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது.

மதிப்பு அதிகரிக்கும் கணவர் தண்டனை பெற்றதால் இந்த வழக்கில் அப்பாவி மனைவி பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு பெண்ணாக இருந்து அவர் தாயாக மாற குழந்தையை பெற்றேடுக்க வேண்டியது அவசியமாகும். அவர் தாயாகும்போது அவரது திப்பு இன்னும் பெரியதாக மாறுகிறது. குடும்பத்திலும் சமூகத்திலும் மிகவும் மரியாதைக்குரியவராக மாறுகிறார். கைதியின் மனைவி நிரபராதி என்பதால் அவர் பாதிக்கப்படக்கூடாது என நீதிமன்றம் கருதுகிறது. மேலும் இந்த விஷயத்தை மனிதாபிமான ரீதியாக நீதிமன்றம் அணுகுகிறது. இதனால் ஆயுள் தண்டனை பெற்ற கைதிக்கு 15 நாள் பரோல் வழங்கப்படுகிறது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here