ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தை நிறைவு! - எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, February 28, 2022

ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தை நிறைவு! - எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

 போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை தற்போது நிறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த இரு நாட்டு பிரதிநிதிகளும் தங்களது நாடுகளுக்கு திரும்பியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் எல்லையில் உள்ள கோமல் நகரில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது ரஷ்யா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னதாக ஆலோசனைக்காகத் திரும்புவதாகவும் இரு நாட்டு பிரதிநிதிகளும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.    

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விருப்பம்!

உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை அவசர கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய பிரதிநிதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் நேட்டோ அமைப்பில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதால் போர் மூண்டதாகவும் குறிப்பிட்டார்.

உக்ரைனும், ஜோர்ஜியாவும் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன. ரஷ்யாவின் நலனை காக்கவே உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.   

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here