ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் நாளை இலங்கை தொடர்பான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சித்திரவதைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியான நில்ஸ் மெல்சனின் அறிக்கை நாளை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
இதையடுத்து, குறித்த அறிக்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சித்திரவதைகள் தொடர்வதான
குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், இந்தவிடயத்தில் அரசாங்கம் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சித்திரவதைகளைத் தடுப்பது தொடர்பாக வெளிநாடுகளிடம் இருந்து தொழில்நுட்ப உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் மங்கள சமரவீர ஜெனிவாவில் குறிப்பிட்டுள்ளார்.
By M M Nilamdeen