“திரும்பி வாருங்கள்“ – அவுஸ்ரேலிய முகாம்களில் உள்ள இலங்கையர்களுக்கு ரணில் அழைப்பு - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, February 15, 2017

“திரும்பி வாருங்கள்“ – அவுஸ்ரேலிய முகாம்களில் உள்ள இலங்கையர்களுக்கு ரணில் அழைப்பு


ranil - Malcolm Turnbull



அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
அவுஸ்ரேலியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கன்பராவில், அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல்லைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போதே, அவுஸ்ரேலியப் பிரதமருக்கு அருகே நின்று, சிறிலங்கா பிரதமர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
நம்பி வரவேண்டாம்  என்பது  எமது  வேண்டுகோள் .காரணம்  கடந்த  ரணில்  ஆட்சியின் போது  ரணில்  லண்டன்  சென்று இப்படித்தான்  அழைத்தார் .அதன் பின்பு  லண்டன் இருந்து  கொழும்பு திரும்பிய  பல  தமிழ் இளைஞ்சர்கள்    அன்று தொட்டு  இன்று   வரையும் கட்டுநாயக்க  விமான  நிலையத்தில்  CID  பொலிசாரால்  கைது செய்யபட்டு  நீர்கொழும்பு  சிறையில்  அடைக்கப்படுகின்றார்கள் .
கடந்த வருடம்  ஆஸ்திரேலியா  இருந்து வந்த  மட்டக்களப்பு  ஊடகவியலாளர்  சதீஸ்குமார்   விமானநிலையத்தில்  CID  யால்  கைது செய்யபட்டு   சிறையில்அடைக்கப்பட்டு  பிணையில்  விடுவிக்கப்பட்டு   இன்னும்   வழக்கு  மற்றும்  வாராந்தம்   ஞாயிற்றுக்கிழமை  தோறும்   CID   யில்  கையொப்பமிட்டு  வருகின்றார் .மற்றும்   அவரது  பாஸ்போர்ட்  CID யால்  பறிமுதல்  செய்யபட்டுள்ளது ..ஒரு  ஊடகவியலாளருக்கே  இந்த நிலைமை   என்றால்  சாதாரண  ஒரு  குடி மகனுக்கு  எப்படி  நிலைமை  என்பதை  புரிந்து கொள்ளுங்கள் .
பிரதமர்    ரணில்விக்கிரமசிங்க கொஞ்சம்  தந்திரமானவர்  அவரது  பேச்சை  நம்பி  ஏமாற  வேண்டாம் .LTTE  யில்  இருந்து  கருணாவை  பிரித்தவர்  இந்த   ரணில்விக்கிரமசிங்க  .எனவே  அகதி  தஞ்சம்  கோரி  அயல்  நாடுகளில்   வாழ்வோர்  இப்போது இலங்கை   வர வேண்டாம்  ..அப்படி மீறி  வந்தால்  விமான  நிலையத்தில்  கைது செய்யப்படுவீர்கள் என்ற  அபாய  எச்சரிக்கை  விடுக்கின்றோம் .
இந்த  செய்தியால்  எங்களை  அரசு  நெருக்கடி தரலாம்  .ஆனால்  உண்மை அதுதான் .
MM Nilamdeen-Chief  Editor

Post Top Ad

Responsive Ads Here