போருக்கு பின்னரான சூழலில் இலங்கை இராணுவம், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உள்ளாக்கியதாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத் தலைவரினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அவரால் முன்வைக்கப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களைக் கொண்ட அறிக்கைய இலங்கை இராணுவ தலைமையகம் முற்றாக மறுப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2010ம் ஆண்டில் சிவில் நிர்வாகம் வடக்கில் ஸ்தாபிக்கப்பட்ட பின், சிவில் நிர்வாகம் தொடர்பான அனைத்து வடிவங்களிலிருந்தும் இலங்கை இராணுவம் விலகிக்கொண்டது.
அதிலிருந்து இலங்கை இராணுவம் சிவிலியன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எதுவித நிர்வாக நடவடிக்கைகலிலும் ஈடுபட்டிருக்கவில்லை எனும்போது பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான கேள்விகள் எழ வாய்ப்பில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம், சட்டம் மற்றும் நல்லிணக்கசெயற்பாடுகளை நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற இந்த சமயத்தில் ஆதாரமற்ற இக்குற்றச்சாட்டுக்கள் நல்லிணக்க செயற்பாடுகளை பாதிப்படையச் செய்யும் என்றும் இராணுவத்தலைமையகம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.