சென்னை மைலாப்பூர் தொகுதி
எம்.எல்.ஏ. யால் திடீர் திருப்பம் மிகப் பெரிய நெருக்கடி நிலை!
விசேட
ஆய்வு! ஆய்வாளர் எம்-எம்-நிலாம்டீன்
சிறை செல்லும் முன்னர்
சசிகலாவின் பினாமி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வாராக்கி
பின்னர் அதிமுக மத்திய எம்பி
மைத்திரேயன் (ஒபீஸ் அணி ) நேற்று தேர்தல் ஆணையாரை
சந்தித்து அதிமுகவின்
தற்போதைய நிலவரத்தை விளக்கினார் .அதன்பின்னர் இன்று சற்றுமுன்னர், அ.தி.மு.க.வில் இருந்து முதல்வர்
எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். மேலும், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ மற்றும் ராஜ்யசபா
உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், பா.
வளர்மதி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளதாக மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே
இன்று காலை, சசிகலா, டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியதாக
மதுசூதனன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தினகரனை
நேற்று சசிகலா துணை பொது
செயலராக நியமித்துள்ளார்.
எடப்பாடி
பழனிசாமியின் 124 எம்.எல்.ஏ-க்கள்
எடப்பாடி
பழனிசாமி 124 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாக
ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததை அடுத்து, அவருக்கு
முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்து விட்டார்
ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
எடப்பாடியோடு சேர்த்து 31 அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றுள்ளனர்.
எடப்பாடி பெரும்பான்மையை காட்ட முடியுமா ?
நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி
ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறி உள்ளார். பழனிசாமி தமக்கு 124 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு
இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தது 117 எம்.எல்.ஏ-க்கள்
எண்ணிக்கையே போதுமானதுதான். ஆனால், இருக்கும்
எம்.எல்.ஏ-க்களில் பலர் இன்னும் முழு மனதோடு எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை
என்று சொல்கிறார்கள். பலர் மனம் மாறும்
நிலையில் உள்ளதாக தெரிகிறது.
திடீர் திருப்பம் சென்னை மைலாப்பூர்
தொகுதி எம்.எல்.ஏ.,
இந்நிலையில்
தருணத்தில் மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,ஆர்
.நடராஜ் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு
நாளை மிகப்பெரிய தாக்கத்தை
எடப்பாடி சாமிக்கு காட்டும் நிலை உள்ளது.இந்த தாக்கம் மேலும் சில எம்.எல்.ஏ-க்கள் இதே போன்ற முடிவை
எடுக்கக் கூடும். எனவே 7 -8 எம்.எல்.ஏ-க்கள் கடைசி நேரத்தில்
சபைக்கு வராமல் போய்விட்டால் அல்லது எதிர்த்து வாக்களித்தால் எடப்பாடி பழனிசாமி
ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும். ஆட்சி கவிழக்கூடும்.
ஓ.பன்னீர்செல்வம்
அணியில் இருக்கும் 10 பேர், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக
வாக்களிக்க மாட்டார்கள். தி.மு.க-வும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க
மாட்டோம் என்று சொல்லிவிட்டது.
எடப்பாடிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா?
எடப்பாடிக்கு
காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்குமா என்ற சந்தேகம் எல்லா தரப்பிலும் எழுந்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
திருநாவுகரசர்,
"அ.தி.மு.க-வுக்கு போதுமான
எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது. எனவே எங்களுடைய ஆதரவு அவர்களுக்குத்
தேவையில்லை" என்று சொல்லி இருக்கிறார்.
ஆதரவு
அளிக்க மாட்டோம் என்று அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை. "யாரும் எங்களிடம் ஆதரவு
கேட்கவில்லை என்று சொன்னேன். யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முடிவு
செய்ய எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்
இன்று மாலை
நடைபெறுகிறது. எம்.எல்.ஏ-க்களுடன் கலந்து பேசி உரிய முடிவை அறிவிப்போம்" என்று சொல்லியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின்
அணிக்கு
மறைமுகமாக பி.ஜே.பி ஆதரவு
அளிக்கிறது இப்போது மைலாப்பூர் எம்.எல்.ஏ- நட்ராஜ் கலகக்குரல் எழுப்பி
இருக்கிறார். நடராஜ், அண்மையில்
பி.ஜே.பி தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவை சந்தித்துப் பேசியதாக ஒரு தகவல் உண்டு.
அதன்பின்னர்தான்
இப்படி ஒரு அதிரடி முடிவை அறிவித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். எனவே
பி.ஜே.பி-க்கு எதிராக, மதவாதத்துக்கு
எதிராகச் செயல்பட வேண்டும் என்ற கருத்தில் காங்கிரஸ் கட்சி கடைசி நேரத் திருப்பமாக
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கும்
நிலை உள்ளது . ஜெயலலிதா உடல் நலம்
இன்றி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதில் இருந்து திருநாவுக்கரசர்
அ.தி.மு.க-வுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்து வருகிறார். ராகுலை சென்னை வரவழைத்து
ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க வைத்ததும் திருநாவுக்கரசர்தான்.
அணி மாறுமா ?
தற்போது
அதிமுக எந்த அணியின் கூட்டும்
இல்லாமல் தனியாக இருந்து வருகின்றது.ஆனால் திமுக காங்கிரஸ் அணியோடு
இன்னும் கூட்டில் உள்ளது.இந்த
நிலையில் திருநாவுக்கரசு கட்சி தலைவி
சோனியாவிடமோ அல்லது ராகுல்
காந்தியிடமோ கேட்காமல் எடப்பாடிக்கு
ஆதரவு அளிப்பாரா அல்லது கேட்டுச்
செய்வாரா என்பது இன்னும் தெரியவில்லை.ஆனால் கேட்டு
அல்லது கேட்காமல் திமுக
விரும்பாமல் கூட்டை
உடைத்துக்கொண்டு திருநாவுக்கரசர்
எடப்பாடிக்கு ஆதரவு அளித்தால்
திமுக காங்கிரஸ் கூட்டில் இருந்து
வெளியேறும் .அதனால் இன்னும் 6 மாதம் கடந்து
நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில்
காங்கிரஸ் எடப்பாடி கூட்டு
மிகப்பெரிய தோல்வியை தழுவும்.
ஸ்டாலின் சோனியாவுக்கு
பாக்ஸ்
அதனால்
திருநாவுக்கரசு இப்படிப் பேசினாலும் காங்கிரஸ் எம்;எல்;ஏ கள் எடப்பாடிக்கு ஆதரவு
அளிக்கும் நிலையில் எல்லை எனலாம் .ஆனாலும் திருநாவுக்கரசு கருத்துக்
குறித்து இன்று நண்பகல் சோனியாவுக்கு
பாக்ஸ் மூலம் திமுக
தளபதி ஸ்டாலின் செய்தி
அனுப்பியுள்ளார் .ஸ்டாலின்
தமது பாக்ஸ் செய்தியில்
திமுகாவை வலிந்து பிஜேபி இடம் சேர்த்து
விடாதீர்கள் என்றும் திமுக எப்போதும் மதச்சார்பற்ற கட்சி என்பதையும் தெரிவித்துள்ளார்.
மத்திய
உளவுத்துறை டீஐஜி வர்மாவின் அறிக்கை
இதேவேளை
மத்திய அரசின் தமிழக
உளவுத்துறை டீஐஜி வர்மா ஒரு அறிக்கையை
அவசரமாக டெல்லிக்கு அனுப்பியுள்ளார் .அந்த அறிக்கையில்.எடப்பாடி பெரும்பான்மை காட்ட முடியாது என்றும் எடப்பாடிக்கு காங்கிரஸ்
அணி எம் எல் ஏ க்கள்
ஆதரவு கொடுக்கும் நிலை உள்ளது ..அதாவது எடப்பாடியின் 7-8 எம்
எல் ஏ க்கள் ஆதரவு
கொடுக்க மறுத்தால் அல்லது
ஆதரவு இல்லாமல் போனால் தமிழக காங்கிரஸ் எம் எல் ஏ க்கள்
ஆதரவு கொடுக்கும் நிலை உள்ளது
.அதனால் திமுக காங்கிரஸ்
மீது அதிருப்தி கொண்டு பிஜேபி யில்
இணையும் நிலை உள்ளது என்றும் தற்போதய
நிலையில் தமிழ் நாட்டில் தேர்தல்
நடந்தால் திமுக
மிகப் பெரிய வெற்றியை அடையும்
என்றும் இந்த வர்மா
அறிக்கை கொடுத்துள்ளார்..இந்த
வர்மாவின் அறிக்கை ஒன்றின் மூலம்தான் மோடி அரசு
சசிகலா ஆட்சியை எதிர்க்க
ஆரம்பித்தது.அது வேறு கதை
அதை வேறு கட்டுரையில்
பார்ப்போம் ..
திமுக பிஜேபி உறவு
குறித்து நாம் எமது நேற்றைய
கட்டுரையில் சொல்லியிருந்தோம் .மத்தியில்
வெங்கையாநாயுடு அருண் ஜெட்லி
ஆகியோருடன் தயாநிதிமாறன் தொடர்ந்து
பேசி வருகின்றார்
நேற்று ஆளுனர்
மாளிகைக்கு சென்ற எம்;எல் ஏ
களை வீதியில் வழிமறித்த பொதுமக்கள் சசிகலாவுக்கு ஆதரவு
தெரிவிக்க எவ்வளவு பணம்
வாங்கினது என்று கண்டபடி
மிகவும் மோசமான வார்த்தைகள்
கொண்டு திட்டி நாறடித்து விட்டார்கள் ..சில எம்;எல் ஏ க்கள் தங்களது
வாகனத்தை விட்டு ஓடிய
சம்பவங்களும் உள்ளது .இந்த
நிலையில்தான் மைலாப்பூர் எம்;எல் ஏ. நடராஜை தமிழக
பிஜேபி காரர் ஹெச் .ராஜா
சந்தித்து எடப்பாடிக்கு நீங்கள்
ஆதரவு கொடுத்தால் அடுத்தமுறை நீங்கள் ஜெயிக்க முடியாது
என்றும் தமிழகத்தில் பிஜேபி ஆட்சி
அமைய நீங்கள் எடப்பாடி
ஆதரவை வாபஷ் பெறவேண்டும் என்றும் மூளை
சலவை செய்துள்ளார் .இந்த அறிக்கையும்
வர்மா டெல்லிக்கு அனுப்பியுள்ளார்
.அதன்பின்புதான் நடராஜா அடித்தார் அந்தர்
பல்டி..
இரண்டு
அணியும் ஆளாளுக்கு பதவி நீக்கம்
செய்துள்ளதால் பழனிசாமியின் ஆட்சி
நீடிக்க எந்த வாய்ப்பும் இல்லை .காரணம்
ஒபீஸ் அணியில் இருந்து அதிமுகா கட்சியின்
தலைவர் மதுசூதனன் இருப்பதால் .எடப்பாடி தினகரன்
அணி ஜெயிக்க வாய்ப்பில்லை
..இனிமேல் நீதி மன்றம் தீர்ப்பு
சொல்லும்வரை 356 ரை பயன்
படுத்தி ஜனாதிபதி ஆட்சி அமைய
மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது ...
எனவே
தமிழக அரசியலில் நாளை 11 மணிக்குள் எதுவும் நடக்கலாம்..நாளை பார்ப்போம்.. .
--ஆய்வாளர் எம்;எம்; நிலாம்டீன்-