புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு தேசிய பாதுகாப்புக்கு விரோதமானதாக இருக்காது என்று, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, உறுதி அளித்துள்ளார்.
முன்னாள் பிரதி அமைச்சரும், சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான, ஓய்வுபெற்ற சிறிலங்கா படை அதிகாரிகள் குழுவொன்றிடமே சிறிலங்கா அதிபர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, தான் எப்போதும் சிறிலங்கா படையினரின் நலன்களில் கவனம் செலுத்துவேன் என்றும், சிறிலங்கா அதிபர் உறுதி அளித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் படை அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா அதிபரைச் சந்தித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தச் சந்திப்பின் போது, படையினர் மற்றும் முன்னாள் படையினரின் நலன்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
அதேவேளை, தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக புதிய அரசியலமைப்பு அமையக் கூடாது என்றும் முன்னாள் படை அதிகாரிகள், சிறிலங்கா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அதாவது நெருங்கிவரும் போர்க்குற்றம் சமந்தமாக ஏதாவது நெருக்கடிகள் படைகளுக்கு வருமானால் அதிபர் மைத்திரி காப்பற்ற வேண்டும் .என்றும் வடக்கில் 2 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவ அணி மீது ஏதாவது போர்க்குற்றம் வந்தாலும் புதிய அரசைமைப்பு மூலம் எங்களை காப்பற்ற வேண்டும் என்றுதான் இவர்களின் கோரிக்கை அமைந்துள்ளது ..

ஆய்வாளர் M.M.நிலாம்டீன்