ஜனவரி 26ஆம் நாள் கொல்லப்படுவாரா சிறிலங்கா அதிபர்? – விசாரணை ஆரம்பம்
வரும் ஜனவரி 26ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கொல்லப்படுவார் என்று, விஜிதமுனி ரோகண, தனது முகநூலிலும், சமூக வலைத்தளங்களிலும் காணொளிகளை பதிவேற்றியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் மரணத்துக்குப் பின்னர் நடக்கும் அதிபர் தேர்தலில், கோத்தாபய ராஜபக்ச, தமிழ், முஸ்லிம்களின் வாக்குகள் இன்றியே வெற்றி பெறுவார் என்றும், பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பார் என்றும் இவர் ஜோதிட எதிர்வுகூறல் வெளியிட்டுள்ளார்.
இவரது இந்த ஜோதிட எதிர்வுகூறல் தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சின் செயலர் நிமல் போபகே நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தகவல் வெளியிடுகையில், “விஜிதமுனியி இந்தக் கருத்துக்களை அதிகாரிகள் அலட்சியம் செய்ய முடியாது. இவர் வரும் ஜனவரி 26ஆம் நாள் சிறிலங்கா அதிபர் கொல்லப்படுவார் என்று கூறியிருக்கிறார்.
சிறிலங்கா அதிபரை படுகொலை செய்யும் பரந்துபட்ட திட்டம் ஒன்றின் அங்கமாக இந்தப் பரப்புரை அமைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.
ராஜீவ் காந்தியை தாக்கிய விஜிதமுனி ரோகண, இராணுவ நீதிமன்றத்தினால் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிறிலங்கா அதிபராக இருந்த பிரேமதாச, அவரை இரண்டரை ஆண்டுகளில் பொதுமன்னிப்பு அளித்து விடுவித்தார்.
அதற்குப் பின்னர், இசை ஒலித்தட்டு விற்பனையாளராக, அரசியல்வாதியாக உலாவந்த விஜிதமுனி, தற்போது ஜோதிடராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த விஜிதமுனி ரோகண என்பவர் முன்னாள் அதிபர் மகிந்தவின் ஆணைக்கு அமைவாக இப்படியொரு வதந்தியை எடுத்து விட்டிருக்கலாம் ..இலங்கை ராணுவத்தில் இன்னும் மஹிந்த அணி கொண்ட ஆதரவு படை மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய அணி கொண்ட கஜபாகு இராணுவத்தினர் சுமார் 15 ஆயிரம் ராணுவ துருப்புக்கள் உள்ளனர் .
இந்த அணிமூலம் இலங்கை அதிபர் மைத்திரி படுகொலை செய்யப்பட மிக அதிக வாய்ப்புள்ளது.விஜிதமுனி ரோகண வின் ஜாதகம் ஜோசியம் என்று அரசு சுமா விடக் கூடாது இவரை கைது செய்து எப்படியான யோசியம் பார்த்தாய்.? ..இதற்கு முதல் யாரின் யோசியம் பார்த்தாய் ? ஏதாவது யோசியம் நடாந்துள்ளதா ? என்று விசேட போலிஸ் விசாரணை நடத்த வேண்டும் .
இந்த விஜிதமுனி ரோகண வின் பொய்யாகிப் போன ஜோசியத்தின் மூலமாக அதிபர் மைத்திரி இலங்கை ராணுவத்தின் மஹிந்த மற்றும் கோதாபய அணியினால் குறி வைக்கபட்டுள்ளார் என்பது மற்றும் உறுதியாக சொல்ல முடியும்..
விஜிதமுனி ரோகணவை அரசு ஏன் கைது செய்வதை காலம் தாழ்த்தியது .இவர் கடந்த ஒரு வருடமாக அதிபர் மைத்திரி கொல்லப்படுவார் என்று பல தடவைகள் பகிரங்கமாக சொல்லி விட்டார் ...இனியும் இவரை விடக் கூடாது .இவரை பல கோணங்களில் விசாரணை செய்ய வேண்டும் .
ஆனாலும் இவரை கைது செய்து அடுத்த தினம் பிணையில் விடுவித்து விட்டது அரசு.ஆனால் இப்படியாக தமிழர் or முஸ்லிம் ஒருவர் ஒரு ஜோசியம் or எதிர்வுகூறல் சொல்லியிருந்தால் சொல்லிய நபர் உயிரோடு இருக்க முடியுமா? அவனை சிங்கள படை விட்டு வைக்குமா? சொல்லிய நபர் வெள்ளை வான் கொண்டு கடத்தி சித்திரவதை செய்து கொலை செய்து புதைத்து விட்டிருப்பார்கள்.
ஒரு நாட்டின் அதிபர் கொலை செய்யப்படுவார் என்று எச்சரிக்கை செய்த நபரை அவர் சிங்களவர் என்பதால் விட்டு விட்டார்கள் .ஆக முழு நாடும் அறிந்த ஒரு மிகப்பெரிய கொலை எச்சரிக்கை விடயத்திலும் அதிபர் மைத்திரி தொட்டு பாதுகாப்பு படையும் இனப்பாகுபாடு .> வேறுபாடு > துவேசம் காட்டியுள்ளது .. இதிலுமா உங்க தேசிய சிங்கள மேலாண்மையை காட்டுவது .இதிலுமா உங்க தேசிய இனவாதத்தை காட்டுவது ..நல்லா உருப்படுவீங்க >>வாழ்க உங்க இனவாதம் >>

ஆய்வாளர் M.M.நிலாம்டீன்