தமிழக முதல்வர்
ஜெயா அம்மாவின் இறப்பில்
மர்மம் சந்தேகம் நீடிக்துக் கொண்டே போகின்றது
.அதன் உச்ச கட்டம் அம்மாவின்
இறப்புக்
குறித்து சிபிஐ விசாரணை வேண்டும்
என்று வரிந்து
கட்டிக் கொண்டு சசிகலாவின்
எதிர்ப்பு நிற்க்கின்றது . ஆரம்பத்தில் சாதாரண
சந்தேகம் வந்தாலும் இப்போது இந்த
சந்தேகம் இன்று சிபிஐ
யின் வாசல் கதவுகளை தட்டியுள்ளது
அப்படியானால் சசிகலாவுக்கு எதிர்கட்சிகள் உட்பட
மத்திய அரசு எல்லோரும்
பயம் அடைகின்றார்கள்
..அப்படியானால் சசிகலா மீது
ஏதோ ஒன்று இருக்கின்றது
.சசிகலாவுக்கு அஞ்சுகின்றார்கள்.
சசிகலாவை பிழையாக
காட்ட ஒரு கூட்டம் அலைகின்றது..இவர்களின் இந்த பயம் பீதி என்பது ஜெயாவுக்கு பின்பு
அதிமுக வை கொண்டு செல்லும் பலம்
திறமை தைரியம் சசிகலாவிடம்
உள்ளது என்றுதானே அர்த்தப்படும்
.காரணம் 30 ஆண்டு
காலமாக ஜெயாவுடன் இருந்து ஜெயா
பட்ட துன்பங்கள் துயரங்கள்.சிறை வாழ்க்கை எல்லாம் ஏராளம் என்றால் மிகையாகாது அனுபவரீதியாக முட்கள் நிறைந்த பாதை கடந்துதான் ஜெயாவுடன் பயணித்துள்ளார். இந்த சசிகலா.
இப்போது அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுதுள்ள கேள்வி என்பது ஜெயலலிதா
இடத்தை சசிகலா நிரப்புவாரா, அந்த அளவுக்குப் பேசுவாரா, தேர்தல் பிரசாரம் செய்வாரா, சமாளிப்பாரா என்பதுதான் காலப்போக்கில் அதையும் சசிகலா நிருப்பிப்பார் .நிருப்பிக்க வேண்டிய தேவையும் சசிக்கு வந்துள்ளது அதிமுக என்ற பெரிய கட்சிக்கு சசிகலா பொருத்தமானவராக இருக்க முடியுமா? என்ற கேள்வியும் அ.தி.மு.க
ஆதரவாளர்கள் சிலருக்கு, வந்துள்ளது
சசிகலா ஒரு
கெட்டவர், தவறானர் என்றால் நபரை, 30 ஆண்டுகளாக ஜெயலலிதா எதற்காக உடன் வைத்திருந்தார்? அவருக்கு அப்படி என்ன அவசியம்
ஏற்பட்டது? தான்
செய்யும் தவறுகளுக்குப் பழிபோடுவதற்காக சசிகலாவை வைத்திருந்தாரா ஜெயலலிதா? அரசியல்வாதிகள் எப்போதுமே
தங்கள் மீது நேரடியாகப் பழிகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக, யாரையாவது ஒருவரை முகமூடியாகப்
பயன்படுத்துவார்கள்.
அப்படி
சசிகலாவைப் பயன்படுத்திவந்தார் ஜெயலலிதா என ஏன் சொல்ல முடியாது? மிகக் கெட்டவரைத் தன்னோடு
வைத்திருப்பவர் எப்படி நல்லவராக இருந்திருக்க முடியும்... போன்ற கேள்விகளுக்கு, சசிகலாவை எதிர்க்கும் தரப்பினர் முழுமையாகப்
பதில் சொல்லியாக வேண்டும்.
ஜெயலலிதா
இறப்பில் மர்மம் இருக்கிறது என்பதும், 75 நாட்களுக்குப் பிறகுதான்
அ.தி.மு.க ஆதரவாளர்கள் சிலருக்கு உறைக்க ஆரம்பித்துள்ளது. ஜெயலலிதாவின் உடல் நிலை
குறித்த மர்மங்களை உடைத்து ஊடகங்கள் கிளப்பியபோது, இது தொடர்பாக ஆடியோவில்
வீடியோவில் பல கேள்விகள் எழுப்பியபோதும்...) ‘உங்களுக்கு எல்லாம் இரக்கமே
இல்லையா? ஒருவர்
நோயில் படுத்திருக்கும்போதுதான் உங்களது புலனாய்வுப் புத்தியை
நிரூபிக்கப்பார்ப்பீர்களா?’ என
ஜெயலலிதா ஆதரவு மனிதர்கள் கோபத்தால் பொங்கித் தீர்த்தார்கள்.
அதே
நபர்கள் இப்போது சசிகலாவைக் ‘கொலைகாரி’யாகச் சித்திரிக்கும் காரியத்தைக் கனகச்சிதமாகச்
செய்கிறார்கள். ஜெயலலிதா சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட வேண்டும் எனக்
கோரிக்கை வந்தபோது கோபமாகக் கர்ஜித்தவர்கள்தான், ‘ஜெயலலிதாவை விஷஊசி போட்டுக் கொன்றுவிட்டார்
சசிகலா’ எனக் கதற
ஆரம்பித்துவிட்டார்கள்.
விஷஊசி
போட்டுக் கொன்றிருந்தால் உடலை எரிக்கத்தானே செய்திருப்பார்கள்’ என்றும், ‘அவர்கள் நினைத்தது மாதிரி
நாடகம் ஆடுவதற்கு அப்போலோ போயிருக்க மாட்டார்கள்’ என்றும், அதற்கு வேறு ஒரு
மருத்துவமனையின் பெயரைக் குறிப்பிட்டும், சசிகலா ஆதரவு சக்திகள்
செய்திகள் பரப்புகிறார்கள்.
இப்படிப்பட்ட
சந்தேகங்களை எதிர்க்கட்சிக்காரர்கள் கிளப்பவில்லை. ஆளும் கட்சியின் ஆதரவு
சக்திகள்தான் கிளப்புகின்றன. அந்தக் காலத்தில் ஜெயலலிதாவை அ.தி.மு.க-வினர்தான்
அதிகமாகக் கொச்சைப்படுத்தினார்கள். இப்போது சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க
ஆதரவாளர்கள்தான் அதிகம் சந்தேகம் கிளப்புகிறார்கள்.
இப்படிப்பட்ட
மனிதர்களுக்குப் பதில் சொல்வதற்காகத்தான், தினமும் தொண்டர்களை போயஸ்
கார்டன் வீட்டுக்கு வரவைத்து சசிகலா சந்தித்துக்கொண்டிருக்கிறார். ‘பார்த்தீர்களா... எனக்கு
எவ்வளவு ஆதரவு இருக்கிறது!’ என்பதை
நித்தமும் சசிகலா காட்டிக்கொண்டிருக்கிறார்.
இந்தச்
சந்திப்புகள் அனைத்தையும் போயஸ் கார்டனில் நடத்துவதில்தான் சசிகலாவின்
சாமர்த்தியம் இருக்கிறது. அதுவும் ஜெயலலிதாவின் அறையில், அவர் எந்த இடத்தில் உட்கார்ந்து
விருந்தினர்களோடு பேசுவாரோ, அந்த
இடத்தில் உட்கார்ந்து சந்திப்புகளை நடத்துகிறார் சசிகலா.
இதன்
மூலமாக, ‘நான்
வேலைக்காரி அல்ல, வீட்டுக்காரி’ என்பதை நிரூபிக்கிறார் சசிகலா.
அதே வீட்டில் அதே இடத்தில் அதே நாற்காலியில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதன்
மூலமாக, ‘நான்
வேறு ஜெயலலிதா வேறு அல்ல. நான்தான் ஜெயலலிதா; ஜெயலலிதாதான் நான்’ என்பதை நாட்டுக்கு
அறிவிக்கிறார்.
ஜெயாவின் துன்பத்தில் சசியின் பங்கு
‘வேதா
இல்லத்தில் தனிமையில் இருந்த ஜெயலலிதாவுக்குத் துணையாக வந்தவர்தான் இந்த சசிகலா அவரது கஷ்ட
நஷ்டங்கள் அனைத்திலும் பங்கெடுத்தவர் இந்த சசிகலா நான். ஜெயாவை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களும்
முக்கியப் பிரமுகர்களும் கொச்சைப்படுத்தியபோது கலங்கிவிடாமல் இந்த சசிகலா.
அமெரிக்காவுக்குப்
போய்விடலாமா... ஹைதராபாத்துக்குப் போய்விடலாமா என ஜெயலலிதா யோசித்தபோது தடுத்தவர் இந்த சசிகலா . எம்.ஜி.ஆர் உடல் தாங்கிய ராணுவ வாகனத்தில் இருந்து ஜெயாவை இறக்கிவிட்டபோது, தனக்கு எதிர்காலம் இனி இல்லை என
நினைத்த ஜெயலலிதாவுக்கு ஊக்கம்கொடுத்தவர் சசிகலா கணவர் நடராஜன்.
‘நான்
உடன்கட்டை ஏறலாமா என யோசிக்கிறேன்’ என்ற விரக்தியில் இருந்த ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை
கொடுத்தவர் இந்த ஜெயலிதா . ஜெயலலிதா எங்கு சென்றாலும் அவர் மீது துரும்புகூட படாமல்
பார்த்துக்கொண்டர் சசி தம்பி திவாகரன். பாதுகாப்புப் படையை அமைத்துக்கொடுத்தது சசியின் அக்கா மகன் தினகரன்.
ஒவ்வொரு
கட்டத்திலும் சுதாகரன், வெங்கடேஷ், மகாதேவன் ஆகியோர் கட்சிப்
பணிக்காக ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றார்கள். இறுதிக்கட்டத்தில் ஜெயலலிதாவின்
உடல்நிலையைப் பார்த்துக்கொண்டது டாக்டர் சிவக்குமார். கடந்த நான்கு ஆண்டுகளும்
ஜெயலலிதாவைக் கவனிப்பதைத் தவிர, வேறு எந்தக் காரியமும் பார்க்க நேரம் இல்லாமல் இருந்தார்
அவர்.
இப்படியாக சசிகலாவின் மொத்தக் குடும்பமும் ஜெயலலிதாவுக்காக, அ.தி.மு.க-வுக்காக
கடந்த 30 ஆண்டுகளாக உழைத்திருக்கிறதே! சசிகலா குடும்பத்தைத் தவிர வேறு யார் பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதியானவராக இருக்க
முடியும்?’ என்ற கேள்விக்கு இன்று சசியை எதிர்ப்பவர்கள் என்ன பதில் சொல்லுவார்கள்.. சும்மா பொறாமை காரணமாக எதிர்க்க கூடாது ..ஜெயாவின் புகைப்படம் ஓன்று கூட வரவில்லை என்றால் அதில் ஒரு பெரிய விடயம் இருக்கும் அவைகள் ஒரு நாள் இந்த சசிகலாவால் சொல்லப்படும் அதற்கான சூழல் இப்போது இல்லை என்பதுதான் உண்மை..ஒரு நாள் ஒரு போது மேடையில் ஜெயாவுக்கு என்ன நடந்தது என்று இதே சசிகலா சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை..
எந்த ராஜ்ஜாஜி மண்டபத்தில் இருந்து ஜெயா அம்மா இறக்கி தள்ளபட்டு அவமானப்படுத்தப்பட்டாரோ அந்த மணடபத்தில் ஜெயா ஒட்டுமொத்த தமிழக மக்களின் பார்வைக்காக ஜெயா வைக்கபட்டார் ..இந்த சவாலை செய்தவர் இந்த சசிகலா..
ஜெயாவை சசிகலா திட்டமிட்டு கொலை செய்தார் விஷ ஊசி போட்டார் என்பதெல்லாம் ஒரு திட்டமிடப்பட்ட பொய்.. சசிகலா மீது கொண்ட.. பொறாமையின் உச்ச வெளிப்பாடுகள் ..சசியின் குடும்பம் கொஞ்சம் பெரிது. அதனால் கொஞ்சம் அள்ளுவது நடந்துள்ளது.கலைஜர் கருணாநிதி குடும்பம் மட்டும் ஊழல் செய்யவில்லையா ? அரசியல் என்றாலே ஊழல் நடந்துதான் ஆகும் ..அதற்காக ஒரு பெண்ணை இப்படி அவமானப்படுத்தியிருக்க கூடாது.ஜெயாவை எப்படி அவமானப் படுத்தினார்களோ அதேபோன்று ஒரு நிலையை இன்று சசிகலாவுக்கு செய்ய ரெடியாக உள்ளார்கள்.
மோடி அரசு கொல்லைப்புறம் வழியாக தமிழ் நாட்டை OP என்ற பலமில்லாத ஒருவர் மூலமாக ஆட்சி செய்யப் பார்க்கின்றது. சசிகலா அதிமுக கட்சிக்கு தலைமை தாங்கினால் மோடி அரசுக்கு சசி கட்டுபடமாட்டார் என்பது தெரியும் அதனால்தான் மோடி அரசு சசிகலாவுக்கு எதிராக மறைமுகமாக சதி செய்து வருகின்றது.
அதன் ஒரு வடிவம்தான் சசிகலா புஷ்பா MP மூலமாக சசிக்கு எதிராக இயக்கி வருகின்றார்கள்..இது வரையும் காணப்படாத ஜெயாவின் அண்ணன் மக்கள் தீபா இன்று வெளிவந்துள்ளார்.இந்த தீபாவை புஸ்பா MP கொம்பு சீவி வருகின்றார். தீபா மற்றும் புஷ்பா MP ஆகியோரை மோடி அரசு இயக்கி வருகின்றது .அப்படியானால் சசியிடம் உள்ள அபார திறமையை கண்டு எல்லோரும் பயபடுகின்றார்கள்..பார்ப்போம்
இன்று சசியை எதிர்ப்பவர்கள் எல்லோரும் ஒரு நாள் இந்த சசிகலாவின் காலடியில் விழும் நாள் வெகு தொலைவில் இல்லை..
ஆனால் இப்போதைய நிலையில் சசிகலா அதிமுக கட்சியின் பொது செயலாளர் பதவியை மட்டும் பெற வேண்டும் முதல்வர் பதவி இப்போது பெறக் கூடாது ..கட்சி தலைமை பதவியை மட்டும் பெற்றுக் கொண்டு முதல்வர் பதவி பெறுவதற்காகன வேலைப் பாடுகளை அமைக்க வேண்டும் அதன் பின்பு OP யை தானாக பதவி விலகுமாறு சொல்ல வேண்டும் .OP எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடியவர் அதனால் OP மீது சசிகலா பயம் கொள்ள வேண்டிய தேவையே இல்லை.கட்சி தலைமை பொறுப்பை எடுத்துக் கொண்டு கொஞ்சம் மெதுவாக முதல்வர் பதவியை அடைவது மிக நல்லது.. சசிகலா அவசரமாக முதலவர் பதவியை அடைய முயல்வது கொஞ்சம் ஆபத்தானது..
கொஞ்சம் பொறுமையாக சசிகலா இலக்கை அடைவது இன்னும் நல்லது .அக்காவுக்கு அவசரம் வேண்டாம் ..
..
ஆய்வாளர் : MM நிலாம்டீன்