- Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, October 26, 2016

Image result for actress rambha family pics     தன்னுடன் சேர்ந்து வாழ கணவருக்கு உத்தரவிடக்கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில்  ஆந்திர     தொடை   அழகி  நடிகை ரம்பா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு டிசம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 
நடிகை ரம்பா

நடிகர் பிரபு நடித்த ‘உழவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. இவரது இயற்பெயர் விஜயலட்சுமி. இவர் நடித்த ‘உள்ளத்தை அள்ளித்தா‘ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

நடிகை  ரம்ஸ்  க்கு  செவ்வாய்  தோஷம்  இருந்து   வந்ததால்  ரம்ஸ்  க்கு   திருமணம்  தள்ளிப் போய்க்கொண்டே  இருந்தது. இந்த  நிலையில்தான்  கனடா  வாழ்   ஈழத்து  தமிழர்  இந்திரகுமார்  அப்போதைய   நம்ம   கனவுக்  கன்னி   ரம்ஸ்   சை   திருமணம்  செய்து கொண்டார் ..

இவருக்கும், இலங்கை தமிழரான இந்திரகுமார் (வயது 47) என்பவருக்கும் 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. தற்போது 39 வயதாகும் ரம்பாவுக்கும், அவரது கணவர் இந்திரகுமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரம்பா சென்னைக்கு வந்துவிட்டார்.
கோர்ட்டில் ரம்பா மனு

கணவர் இந்திரகுமாரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று சென்னை குடும்பநல கோர்ட்டில் நடிகை ரம்பா ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

இலங்கை தமிழரான இந்திரகுமார் பல ஆண்டுகளுக்கு முன்பு கனடா நாட்டில் குடியேறினார். சிவில் என்ஜினீயரான அவர் கனடா நாட்டில் ‘மேஜிக்வுட்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் 2009–ம் ஆண்டு கலைப்புலி தாணு மூலம் எனக்கு அறிமுகமானார். அப்போது தன் நிறுவனத்தின் விளம்பர தூதராக என்னை அறிவித்தார்.
இதற்காக எனக்கு பி.எம்.டபிள்யு. காரை அன்பளிப்பாக வழங்குவதாக அப்போது பத்திரிகைகளில் பேட்டி அளித்தார். ஆனால், அந்த கார் அவரது சகோதரர் தவக்குமார் பெயரில் தான் இதுவரை உள்ளது. நாங்கள் இருவரும் காதலித்து 2010–ம் ஆண்டு ஜனவரி 27–ந் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டோம்.
ஏற்கனவே திருமணமானவர்

ஆனால், இந்திரகுமாருக்கு 2000–ம் ஆண்டு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. அவரை 2003–ம் ஆண்டு இந்திரகுமார் விவாகரத்து செய்துவிட்டார். இதை என்னிடம் முதலில் அவர் தெரிவிக்கவில்லை. கனடா நாட்டில் நாங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். எங்களுக்கு முதலில் ஆண் குழந்தை பிறக்கும் என்று என் கணவரின் குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால், 2011–ம் ஆண்டு எங்களுக்கு லாண்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.

இதனால் என் கணவரும், அவரது குடும்பத்தினரும் அதிருப்தியடைந்தனர். பெண் குழந்தை பிறந்ததால், இந்து முறைப்படி செய்ய வேண்டிய எந்த ஒரு சடங்குகளையும் அவர்கள் செய்யவில்லை. இந்த மனவருத்தத்தை சரிசெய்ய நான் எவ்வளவோ முயற்சி செய்தும் எந்த பயனும் ஏற்படவில்லை.
அடித்து உதைத்தார்

அவர்கள் தினமும் என்னை கொடுமைப்படுத்தினர். என் கணவர் தினமும் குடிபோதையில் வந்து என்னை சித்ரவதை செய்ய தொடங்கினார். என் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் தன் பெயருக்கு எழுதி வைக்கவேண்டும் என்று கேட்டார். இதற்கு சம்மதிக்காததால் என்னை தினமும் அடித்து உதைத்தார்.

இந்த கொடுமையை தாங்க முடியாமல் 2012–ம் ஆண்டு போலீசுக்கு போன் மூலம் புகார் கொடுத்தேன். கனடா நாட்டு போலீசார் என் வீட்டிற்கு வந்து விசாரித்தனர். அப்போது போலீசில் உண்மையை சொன்னால் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன். குழந்தையையும் உன்னிடம் இருந்து பிரித்துவிடுவேன் என்று என் கணவர் என்னை மிரட்டினார். இதனால் போலீசாரிடம் உண்மையை சொல்லாமல் மவுனமாக இருந்துவிட்டேன்.
மீண்டும் கர்ப்பம்

அதன்பின்னர் என்னை இந்தியாவுக்கு அனுப்ப என் கணவரின் குடும்பத்தினர் முயற்சித்தனர். 2012–ம் ஆண்டு என் மகளை இந்தியாவுக்கு நான் கடத்தி செல்ல முயற்சிப்பதாக என் மீது டோரண்டோ போலீசில் என் கணவர் புகார் செய்தார். அதேபோல, கனடாவில் உள்ள குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து என்னிடம் இருந்து என் குழந்தையை சிறிது காலம் பிரித்துவிட்டனர். பல்வேறு சட்ட போராட்டத்துக்கு பின்னர் என் மகளை மீட்டேன்.

பின்னர் சிறிது காலம் சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். இதில் மீண்டும் நான் கர்ப்பம் அடைந்தேன். இந்த முறை ஆண் குழந்தை பிறக்கும் என்று மீண்டும் என் கணவர் குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால், 2015–ம் ஆண்டு மார்ச் மாதம் எனக்கு ஷாசா என்ற 2–வது பெண் குழந்தை பிறந்தது.
சேர்ந்து வாழ…

இதனால் மீண்டும் குடும்பத்தில் பிரச்சினை தொடங்கியது. என் கணவரின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் என்னை அசிங்கமாக பேசி கொடுமைப்படுத்தினர். என் கணவரும் மீண்டும் குடிபோதையில் வந்து என்னை கொடுமைப்படுத்த தொடங்கினார். தற்போது நான் சென்னை வந்துவிட்டேன்.

என் கணவருக்கு நல்ல மனைவியாக வாழ்ந்து இருக்கிறேன். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். ஆனால், அவர் என்னை விட்டு பிரிய திட்டமிடுகிறார். எனவே, என்னுடன் சேர்ந்து வாழ என் கணவருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
ஒத்திவைப்பு

இந்த மனுவை குடும்பநல கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. விசாரணையை டிசம்பர் 3–ந் தேதிக்கு தள்ளிவைத்து, அன்று இந்திரகுமார் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனாலும்  சேர்ந்து  வள வேண்டும்  என்ற  உத்தரவு   நீதி மன்றத்தினால்  வழங்கப்படும்   என்று  எதிர்பார்க்கப்படுகின்றது. 
MMNI

ramba

Image result for actress rambha family pics Image result for actress rambha family picsImage result for actress rambha family pics     Image result for actress rambha family pics Image result for actress rambha family pics

Post Top Ad

Responsive Ads Here