மீனாட்சிபுரம் TO சென்னை புழல் ஜெயில்-சுவாதி கொலை நடந்தது என்ன -விசேட புலனாய்வு கட்டுரை-பாகம் -08 - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, August 28, 2016

மீனாட்சிபுரம் TO சென்னை புழல் ஜெயில்-சுவாதி கொலை நடந்தது என்ன -விசேட புலனாய்வு கட்டுரை-பாகம் -08

மீனாட்சிபுரம் TO சென்னை புழல் ஜெயில்-சுவாதி கொலை நடந்தது என்ன -விசேட புலனாய்வு கட்டுரை-பாகம் -08

நான் கொலைச் செய்யப்படலாம்.துப்பறிவாளர்  திலீபன்

கடந்த  வாரம்  பொறந்தநாளைக்கு என் நண்பர்களுடன் வீட்ல சமையல் ரெடி பன்னிட்டு இருக்கும்போது. காலையில 9 மணிக்கு யூனிபார்ம் போட்ட காவல் துறையினர் 5 பேர் முன்பக்கமாகவும் பின்பக்கமாவும் ஊருக்குள் நுழைந்து என் வீட்ட சுற்றிவளைத்தனர்.. நீங்க என்ன தீவிரவாத அமைப்பா எப்டி பழக்கம்,? ஏன் வந்திருக்க? ஐடி கார்ட் காட்டு? உன் பர்த் டேக்கு ஃப்ரூப் கொடுன்னு ஒரு மணி நேரம் விசாரிச்சாங்க.. அவங்களுக்கு எல்லா பதிலையும் சொன்னோம்.. என் நண்பர்கள் அட்ரஸ் முழுக்க வாங்கிட்டு கெளம்பிட்டாங்க..
அவுங்க போன கொஞ்ச நேரத்துலயே மப்டியில கொஞ்ச பேரு அதே மாதரியாக விசாரிச்சாங்க.. அவுங்களும் நோட் பன்னிட்டு போய்ட்டாங்க.
மூனாவது தடவையும் மப்டியில வந்து இதே மாதரியாக  விசாரிச்சாங்க.. நாங்க விவரத்த முழுக்க சொல்லிட்டு அங்க இருந்தா பிரச்சனை வரும்னு வீட்ல இருந்து சீக்கிரமே கெளம்பிட்டோம்...
கெளம்புன பெறகும் எங்களுக்கு போன் பன்னி எங்க இருக்கீங்க பாக்கனும் அப்டி இப்டி-னு கேட்டாங்க. ஏன் இப்டி பாலோ பன்றீங்கன்னு கேட்டதுக்கு "உங்கள பாலோ பன்ன சொல்லி எங்களுக்கு உத்தரவு" அப்டின்னு சொன்னாங்க. மறுபடியும் போலிஸ்காரங்கள பாத்துட்டுதான் நைட்டு அவுங்க அவுங்க ஊருக்கு கெளம்புனோம்.இந்த ராம்குமார் வழக்க முதல்ல இருந்தே நாங்கதான் எடுத்து நடத்துரோம்.. ராம்குமார் குடும்பத்த ரெண்டு முறை திருநெல்வேலியில போய் நான் சந்திச்சி பேசிருக்கேன்.... நா ஆரம்பிச்ச ராம்குமார் வாட்ஸப் குரூப் மூலமா நெரையா தகவல சேகரிச்சி வழக்குக்கு கொடுத்துருக்கோம்..
ஸ்வாதி வழக்குக்காக எங்க நண்பர்கள் எல்லாம் நிதி திரட்டி 12 ஆயிரம் வழக்கறிஞருக்கு கொடுத்திருக்கோம்..
ராம்குமார்தான் கொலையாளி என்று திரும்ப திரும்ப சொல்ல சொல்லி மீடியாவுக்கு கோடி கோடியா பணம் ஆதிக்கவர்க்கத்திடமிருந்து போய்ட்டிருக்கு.....
ராம்குமாரை சிக்க வைக்க போலியான ஆதாரங்களை உருவாக்குவதும், ஸ்வாதியின் கொலை சம்பந்தமான உண்மையான தடையங்களை அழிப்பதிலும் முழு மூச்சில் செயல்படுகிறது காவல்துறை.....
இப்போதைக்கு இந்த ஸ்வாதி வழக்கை மந்தப்படுத்தி முடித்திவிடும் நோக்கத்தில் காவல் துறை செயல்படுகிறது..
எங்களுக்கு உதவி தேவப்படுது.. துண்டறிக்கை அடிக்கவும், அடுத்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தவும் பண உதவி தேவைப்படுகிறது..
பார்ப்பனியம், காவல்துறை, விபச்சார ஊடகம், RSS இந்துத்துவா, ஆதிக்கவர்க்கம், ஆண்டஜாதி திமீர்.. இவையனைத்தின் முகமூடியை கிழிக்க நமக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு இது..
தோழர்கள் உதவுங்கள்.. நன்றி....!!!

ஒரு வேளை  நான் கொல்லப்பட அது காவியும், அதிகார வர்க்கமும் இனைந்து நடத்துன திட்டமிட்ட படுகொலை.. இன்னொரு விஷ்யம் அவன் என் கழுத்தையே அறுத்தாலும் நான் கெஞ்சமாட்டேன்.. இது  தற்போது  கைது செய்யப் பட்டிருக்கும்   நாக்கை   திலீபன்   கடந்த  வாரம்   தந்துள்ள  ஊடக  அறிக்கை

திடீர்.. திடீர் திருப்பங்கள் சுவாதி குடும்பத்துக்கும் கலைச்செல்விக்கும் ராஜாக்கும் என்ன தொடர்பு

சுவாதி படுகொலை வழக்கு விசாரணையை ஆரம்பத்திலிருந்தே ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்ற சமஸ்கிருத மதவெறி அமைப்பினரும், ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற பிரபலங்களும் திசை திருப்பும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முதலில், பிலால் என்ற முஸ்லிம் இளைஞர் தான் சுவாதியை கொன்ற குற்றவாளி என்ற தகவலை இவர்கள் பரப்பினர்.
ஹெச்.ராஜா இதற்கும் ஒரு படி மேலே போய், இக்கொலையில் இஸ்லாமிய அமைப்புக்கு தொடர்பு இருக்கிறது என புரிந்துகொள்ளும் விதமாக விஷமத்தனமாக பேட்டி அளித்து வந்தார்.
சுவாதியை ஒருதலைக் காதல் காரணமாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கொலை செய்ததாக போலீசார் குற்றம்சாட்டி, அவரை கைது செய்தனர்.
உடனே, “ராம்குமார் வெறும் அம்புதான்; ஏவியவர்கள் வேறு எங்கோ இருக்கிறார்கள். அவர்கள் மத அமைப்பினராகவோ, தீவிரவாத அமைப்பினராகவோ இருக்கலாம்என்று விஷம் கக்கினார் ஹெச்.ராஜா.
இதனையடுத்து, சமஸ்கிருத மதவெறி அமைப்பைச் சேர்ந்த ஜி.கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர், ஏதோவொரு திட்டத்துடன் அழையா விருந்தாளியாக ராம்குமார் சார்பில் தானே வலிய ஆஜரானார்.
ராம்குமார் குற்றவாளி அல்ல, அவரது கழுத்தை போலீசார்தான் அறுத்தனர் என்றெல்லாம் பேட்டி கொடுத்தார். அதன்பின் அவர் ஹெச்.ராஜாவின் நெருங்கிய நண்பர் என்ற குட்டு உடைந்ததால், எல்லோரும் கழுவிக் கழுவி ஊற்றினார்கள். இனியும் நடிக்க முடியாது என வழக்கிலிருந்து விலகிக்கொண்டார் ஜி.கிருஷ்ணமூர்த்தி.
இதற்கிடையில், சுவாதி முகமது பிலால் சித்திக் என்பவரை காதலித்து வந்தார் என்றும், மதம் மாறி அவரை திருமணம் செய்துகொள்ளும் முயற்சியில் இருந்தார் என்றும் தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.
இதனால் இது ஆணவக் கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த வழக்கின் உண்மைகள் மறைக்கப்படுகின்றன. யாரையோ காப்பாற்றும் நோக்கில் போலீஸாரின் விசாரணை நடந்து வருகிறது. இந்த படுகொலைக்கு ஒருதலைக் காதல் காரணம் அல்ல.
ராம்குமார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சுவாதியைக் காதலித்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மதம்விட்டு மதம் மாறும் முயற்சியில் இருந்ததால் இந்தக் கொலை நடந்திருக்கலாம். போலீஸ் விசாரணையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. எனக்குக் கிடைத்த தகவல்படி, முஸ்லிம் இளைஞர் ஒருவரைக் காதலித்திருக்கிறார் சுவாதி. ரம்ஜான் மாதத்தில் நோன்பும் கடைபிடித்தார்என்று பேட்டி அளித்தார் திருமாவளவன்.
திருமாவளவனின் சந்தேகம் நியாயமற்றது என்றால், சுவாதியின் குடும்பத்தினர் தான் கொந்தளிக்க வேண்டும்; விளக்கம் அளிக்க வேண்டும்; போலீசில் புகார் கொடுக்க வேண்டும். ஆனால், சுவாதியின் குடும்ப உறுப்பினரோ, உறவினரோ அல்லாத கலைச்செல்வி என்ற பெண் திடுத்திப்பென இந்த விவகாரத்துக்குள் (வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி போல) மூக்கை நுழைத்து, திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார்.
கலைச்செல்வி தனது மனுவில், “ரம்ஜான் மாதத்தில் சுவாதி நோன்பு இருந்ததாக ஆதாரமில்லாத, அவதூறான தகவல்களைக் கூறி வருகிறார் திருமாவளவன். அவரது பேச்சுக்கள் அனைத்தும் கொலையில் கைதான ராம்குமாருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவரது கருத்துக்கள் அனைத்தும் சட்டத்திற்கு விரோதமாக இருக்கின்றனஎன குறிப்பிட்டிருக்கிறார்.
சுவாதி குடும்பத்தினருக்கு இல்லாத அக்கறை இந்த கலைச்செல்விக்கு ஏன் என்ற கேள்வியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விசாரணையில் இறங்கியபோது தான் தெரிய வந்திருக்கிறது இந்த கலைச்செல்வியும் ஹெச்.ராஜாவுக்கு வேண்டப்பட்டவர் தானாம். தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம்என்ற பெயரில் ஒரு லெட்டர் பேடு சங்கம் தொடங்கி, அதன் தலைவராக இருக்கும் கலைச்செல்வி, ஹெச்.ராஜா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் மற்றும் சமஸ்கிருத மதவெறி அமைப்பினர் பலருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவராம். ( கீழே உள்ள படத்தையு பார்க்கவும்.)
இப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் திரைப்பட இயக்குனரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பரப்புரையாளருமான சிபிசந்தர் கூறியிருப்பதாவது: சுவாதி படுகொலையில் இயல்பாக எழும் கேள்விகளை எழுச்சித்தமிழர் கேட்டதால், ஏதோ ஒரு மர்மத்தை மறைப்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்யும் ஹெச்.ராஜாவின் தூண்டுதலின் பேரில், கலைச்செல்வி என்கிற பெண், எழுச்சித்தமிழர் மீது வழக்கு தொடுத்துள்ளார். அந்த கலைச்செல்வியின் பயணத்தில் யார் யாரெல்லாம் இணைந்திருக்கிறார்கள் என்பதை கவனிக்கவும். புள்ளிகள் எல்லாம் எங்கே இணைகிறதுகவனியுங்கள்….”
புள்ளிகள் எல்லாம் ஹெச்.ராஜா வகையறாக்களிடமே போய் இணைவதால், இவர்கள் ஏதோவொரு பெரிய நாசகார சதித்திட்டத்துடன் தான் தீவிரமாக இயங்குகிறார்கள் என்ற சந்தேகம் வலுக்கவே செய்கிறது. எனவே, திருமாவளவன் சிபிஐ விசாரணை கோருவது நியாயம் மட்டும் அல்ல, அவசர அவசியமும்கூட





.
.
சுவாதி படுகொலை - இன்ஸ்பெக்டர் கருணாகரன் யாருக்காக பலான வேலைகள் பார்த்தார்?




சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த ஜுன் மாதம் 24ம் திகதி படுகொலை செய்யப்பட்ட சுவாதி என்ற பெண் கொலை வழக்கு தொடர்பாக பாண்டிச்சேரியை  பிறப்பிடமாகக்  கொண்ட  தமிழச்சி பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு இதோ,
சுவாதி படுகொலை செய்யப்பட்ட மறுநாள் ஜுன் 25இல், ரயில்வே காவல்துறை டி.ஜ.ஜி.பாஸ்கர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், 'சுவாதி இரண்டு வருடங்களாக ஒருவரை காதலித்துக் கொண்டிருப்பது சுவாதியின் பெற்றோருக்கு தெரியும்' என்கிறார்.
ஜுன் 25இல், சுவாதியின் சகோதரி நித்யா 'சுவாதிக்கு காதலர் யாரும் இல்லை' என்று மறுப்பு அறிக்கை வெளியிடுகிறார். அதன் பின் இன்னும் சில தினங்களில் ரயில்வே காவல்துறை விசாரணையில் தடுமாறுகிறது என்று தமிழக காவல்துறைக்கு சுவாதியின் படுகொலை விசாரணை மாற்றப்படுகிறது.
சென்னை கமிஷனர் தலைமையில் அமைக்கப்பட்ட அவ்விசாரணை குழு 'ஒருதலை காதல்' என்கிறது. கமிஷனர் குழுவில் இருந்த இன்ஸ்பெக்டர் கருணாகரன் இன்னும் பலான காரணங்களை அடுக்குகிறார்.
சுவாதியைக் குறித்து X என்ற பெண்ணிடம் (வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவர்) விசாரணை நடத்தியதும் இதே இன்ஸ்பெக்டர் கருணாகரன்தான்.
பல தகவல்களை வெளியிட்ட அப்பெண் 'சுவாதியின் அப்பாவும் அவரது சித்தாப்பாவும் தான் அப்படுகொலைக்கு காரணமாக இருக்க முடியும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தகவல்களை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் கருணாகரன் நாங்கள் இதுவரை வேறு கோணத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருந்தோம். உங்களுடைய தகவல் அடிப்படையில் விசாரிக்கிறோம். உங்கள் பெயர் வெளியே வராது என்று உறுதி அளித்துள்ளார்.
ஆனால் சில மணி நேரங்களில் மீண்டும் தொடர்பு கொண்டு, 'இப்படி நீங்கள் பேசியதை வெளியே யாரிடமும் கூறிவிடாதீர்கள்' என்று கேட்டுக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக சுவாதியின் அப்பா அப்பெண்ணை பார்த்து, 'நீ சுவாதியின் விஷயத்தில் ரொம்பவும் இன்வாலாகிறாய். உனக்கு பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்' என்று கூறிய 'தொனி' சற்று நக்கலாக இருந்ததாக அப்பெண் சுட்டிக்காட்டுகிறார்.
மற்றொரு பக்கம் என்ன காரணத்திற்காக சுவாதி படுகொலை செய்யப்பட்டாரோ அந்த நோக்கம் ஓய்.ஜி.மகேந்திரன் போன்ற பா.ஜ.க அரசியல் ஆதரவாளர்கள் கிளப்பிய 'இஸ்லாமிய வெறுப்பு அரசியல்' இணையதளங்களில் கடுமையான சச்சரவுகளை எதிர்கொள்ள, படுகொலை வேறு கோணத்தில் முடிக்க வேண்டிய நெருக்கடியை இணைதள விவாதங்கள் உருவாக்கி விட்டன.
திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை கடைசியில் ஒருதலைக் காதலாக மாற்றப்பட்டு தென்காசியில் இருந்த ராம்குமாரை பிடித்து அவர் கழுத்தை அறுக்கும் வரை சென்றது.மறுபுறம் அப்பெண்ணையும் கொல்ல வேண்டும் என்று வெறி கொண்டு எழுந்தது.
இன்ஸ்பெக்டர் கருணாகரன் மறைவாக ஓர் இடத்தில் நிற்க, அங்கே இருவர் வரும் போது அவர்களிடம் கத்தி இருந்ததை தான் பார்த்ததாக அப்பெண் கூறியதை சென்னை கமிஷனரிடமும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரோ, 'அப்படியாம்மா... சரியா பார்த்தியம்மா...' என்பதோடு நிறுத்தி விட்டார்.
ஒருவேளை உண்மையில் சென்னை கமிஷனருக்கு எதுவும் தெரியாது என்றால் இன்ஸ்பெக்டர் கருணாகரனை அவ்வாறு செய்யத் தூண்டியது யார்?
சுவாதியின் அப்பாவா? சுவாதியின் சித்தாப்பாவா? என்பதையாவது விசாரிக்க தமிழக காவல்துறை முன்வருமா?
சந்தேகங்கள்      இதோ...! 

1.
சுவாதி படுகொலை வழக்கு மாநில போலீஸாருக்கு மாற்றப்பட்ட தினத்தன்றே, நுங்கம்பாக்கத்தைச் சுற்றியுள்ள 25 மேன்சன்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சம்பவ நாளன்று செங்கோட்டைக்கு கிளம்பிய ராம்குமார் மீது சந்தேகம் வலுத்துவிட்டது. அறையில் தங்குவதற்காக ராம்குமார் கொடுத்த விண்ணப்பப் படிவத்தில் இருந்த படமும் சி.சி.டி.வி பதிவுகளும் சந்தேகத்தை உறுதி செய்தன. 

2.
 நுங்கம்பாக்கம் மேன்சன்களில் தங்கியிருந்தவர்களின் 600 செல்போன் நம்பர்கள்ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதில், கொலை நடந்தபோது சுவாதியின் செல்போன் டவரும் ராம்குமாரின் செல்போன் டவரும் ஒரே இடத்தைக் காட்டியுள்ளன. வழக்கின் மிக முக்கியமான ஆதாரம் இது. இந்த  இடத்தில்தான்  நாம்  பெருத்த  சந்தேகம் கொண்டோம்

3.
 ஐந்து முறை ராம்குமார் சுவாதியைப் பின்தொடர்ந்துள்ளார். அப்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் பிலாலுக்கு மெசேஜ் அனுப்பிய சுவாதி, 'கறுப்பாக, ஒல்லியாக இருக்கும் ஒருவன் என்னைப் பின் தொடர்கிறான்' எனக் கூறியுள்ளார். அந்த மெசேஜ்களை அனுப்பும் நேரத்தில் ராம்குமார் இருந்த இடமும், சுவாதி இருந்த இடமும் ஒன்று என துல்லியமாகக் காட்டுகிறது செல்போன் டவர். அதாவது நுங்கம்பாக்கத்தில் இருந்து பரனூர் வரையில் சுவாதியைப் பின்தொடர்ந்துள்ளார் ராம்குமார். 

 
ஏப்ரல் மாதத்தில் சென்னை வந்த ராம்குமார் வேறு எங்கும் வேலைக்குப் போகவில்லை. அந்த மாதம் செல்போன் அலைவரிசை நுங்கம்பாக்கத்தையே காட்டுகிறது. மே மாதத்தில் பல நாட்கள் மேன்சனைச் சுற்றியுள்ள பகுதிகளை வலம் வந்திருக்கிறார். அதே மாதம் 20 மற்றும் 21 ஆகிய இரு தேதிகளில் ஆந்திரா சென்று வந்திருக்கிறார். அங்கு யாரை சந்தித்தார்? ஆந்திரா சென்றதற்கான நோக்கம் என்ன என்பது மிக முக்கியமான கேள்வி. அந்த இரண்டு நாட்களும் ராம்குமாரின் செல்போன் ஆந்திரா டவரைக் காட்டுகிறது. 'ஆந்திராவில் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. வேலைக்காக சென்று வந்திருக்கும் வாய்ப்புகளும் இல்லை' என்கின்றனர் சிலர். 

5.
 நெல்லையில் ராம்குமாரை கைது செய்தபோது அவரது வீட்டில் இருந்து சுவாதியின் செல்போனைக் கண்டெடுத்ததாக போலீஸ் சொல்கிறது. ஆனால், கொலை நடந்த மறுநாள் (25-ம் தேதி) இரவு 8.30 மணிக்கு சுவாதியின் செல்போன் சென்னையில் ஆன் ஆகியிருக்கிறது. சில நிமிடங்களில் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது சுவாதியின் செல்போன் யாரிடம் இருந்தது? 24-ம் தேதி இரவே ராம்குமார் செங்கோட்டைக்குப் போய்விட்டார். கொலைக்கு சில மாதங்களுக்கு முன்னதாக, சுவாதியின் செல்போன் மைசூரு டவரைக் காட்டுகிறது. அவர் ஏன் அங்கு சென்றார்? தனியாகச் சென்றாரா... நண்பர்கள், உறவினர்களுடன் சென்றாரா..? அதைப் பற்றி போலீஸார் மௌனம் காப்பது ஏன்?

6.
 ராம்குமாரை முன்னிறுத்தி இந்தப் படுகொலைக்கான ஆபரேஷனை இயக்கியவர்கள் யார்? சுவாதி கொல்லப்பட வேண்டும் என எண்ணியவர்களுக்கு, ராம்குமார் கருவியாகப் பயன்பட்டாரா? கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, தென்காசியில் உள்ள பாப்பம்பாளையத்தில் வாங்கப்பட்டிருக்கிறது. சுவாதி கொலைக்கான ஆபரேஷனுக்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்டாரா ராம்குமார்?

-
இப்படி சந்தேகங்களை விவரித்தவர், " இந்த வழக்கில் வெளியில் வராத மர்மங்கள் பல இருக்கின்றன. சுவாதியின் நட்புகள், அவரது தந்தையோடு ஏற்பட்ட சண்டைகள் என முக்கியமான சிலவற்றைத் திட்டமிட்டு மறைக்கின்றனர். கைது செய்யப்பட்ட ராம்குமார், சுவாதியைக் காதலித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், அவர் சுவாதியைப் பின்தொடர்ந்தார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஏன் பின் தொடர்ந்தார்?; சுவாதியைக் கொல்வதற்கான ஆபரேஷனை வடிவமைத்தது யார்?; ராம்குமாரை இயக்கியது யார் என்பதைப் பற்றியெல்லாம் போலீஸாருக்கு எவ்வித அக்கறையும் இல்லை.
அதனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தால் வழக்கின் போக்கு வேறு திசையில் பயணிக்கும் என்பதால், ஒருதலைக்காதல் என்பதோடு வழக்கை முடித்துக் கொள்ள விரும்புகின்றனர். நேற்று ஐந்து வெற்றுத் தாள்களில் ராம்குமாரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர் போலீஸார். அதில் வேண்டிய வரிகளை இட்டு நிரப்பும் வாய்ப்புகளே அதிகம். எனவே, மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டால் கொலைக்கான உண்மைப் பின்னணி வெளியாகும் என நம்புகிறோம்" என்றார் நிதானமாக. 

சுவாதி தீவிரவாதியா? 
"தீவிரவாத அமைப்புடன் சுவாதி தொடர்பு வைத்திருந்தார். பல்வேறு சட்ட விரோத செயல்களை செய்ய 'அக் குழு' சுவாதியை உபயோகித்துக் கொண்டது. அதற்கு சுவாதியும் உடந்தை"யாக இருந்ததாக தமிழ் தொலைக்காட்சி செய்தி கூறுகிறது.
தங்களுடைய கம்ப்யூட்டரில் இருந்து தங்கள் குழுவினருடன் தொடர்பு கொண்டால் புலனாய்வு துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு விடக்கூடும் என்று 'இந்து' பெண்ணான சுவாதியின் கம்ப்யூட்டரை 'அக் குழு' பயன்படுத்திக் கொண்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.
சுவாதியை 'இந்து' பெண் என்று கூறுவதன் மூலமும் 'அக் குழு' இஸ்லாமியர்கள் என்று வெளிப்படையாக கூறாமல் மீண்டும் முதலில் இருந்து ‪#இஸ்லாமிய_வெறுப்பு_அரசியல் மூலம் உண்மையான இந்துத்துவ குற்றவாளிகளை காப்பாற்றி விடலாம் என திட்டமிடுகிறது.
‪#ராம்குமார் குற்றவாளி இல்லை என்பதற்கான ஆதாரங்களைவிட, சுவாதியின் குடும்ப பின்னணிகளும், சுவாதியின் படுகொலைக்கு காரணமான உண்மையான இந்துத்துவ குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்புணர்வு காவல்துறையினருக்கு இருப்பதாக நிர்ப்பந்திக்கும் ‪#இந்துத்துவ_அரசியல் சுவாதிக்கு கொடுத்திருக்கும் கற்பனை பாத்திரம் தீவிரவாதி.
இந்து ராமராஜியத்தில்,
சுவாதி இஸ்லாமிய இளைஞனை காதலித்தது முதல் குற்றம்.சுவாதி குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் காதலித்த இஸ்லாமியனை ‪#ரிஜிஸ்டர்_மேரேஜ் செய்தது இரண்டாவது குற்றம்.
சுவாதி, இந்துமதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியது மூன்றாவது குற்றம்.
இதற்கு தண்டனை தான் ‪#சுவாதி_படுகொலை. கொலை நடந்த அன்றே ‪#இஸ்லாமியர் தான் அதற்கு காரணம் என்றார்கள். அது திட்டமிட்டு நடத்தப்பட்டது.சுவாதியை ‪#ஆச்சாரப்_பெண் என்றார்கள். அது ‪#பிராமணாள் ஆத்து கெளரவத்திற்காக.

ராம்குமார் அதிகாரமற்ற / ஆதரவற்ற ஏழை இளைஞன் என்பதால் கழுத்தை அறுத்து பேசவிடாமல் செய்து, இவன் தான்‪#குற்றவாளி என்றார்கள். ஆனால், காவல்துறையினரே தடுமாறும் அளவுக்கு சுவாதியின் குடும்ப பின்னணியில் ஏகப்பட்ட குளறுபடிகள்.
'சுவாதியும், ராம்குமாரும் பேஸ்புக் நண்பர்கள்.' ராம்குமாருக்கு சுவாதி மீது இருந்தது 'ஒருதலைக் காதல்' எல்லாம் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகள். இதற்கு மேலும் இதையே பேசிக் கொண்டிருந்தால் காவல்துறையினரின் ‪#கெளரவம்என்னவாகும்?
அதிகாரத்தின் '‪#வலிமை'க்கு '‪#வாய்மை' தெரியாது.
தேவைப்பட்டால் ஒரு பெண்ணை ‪#பத்தினி யாகவும் மாற்றும். அதேப் பெண்ணை ‪#தேவடியா ளாகவும் மாற்றும். முடிந்தால் தீவிரவாதியாகவும் மாற்றும் என்பதற்கு உதாரணமாகிப் போனாள் சுவாதி.
ஒட்டு மொத்த ஆணாதிக்கமும் இங்கேதான் ஒரு பெண்ணை உருப்போட்டு உருட்டிக் கொண்டிருக்கிறது.இவர்கள்தான் இந்து ராம ராஜியத்தின் உத்தம ‪#இராமன்கள்!

தொடரும் 












Post Top Ad

Responsive Ads Here