எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தெரிவுகள் இன்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது .
அனைத்து தேர்தல் தொகுதிக்குமான வேட்பாளர்களை தெரிவு செய்வதே நோக்கம் என்று கூட்டமைப்பின் செயலரும் .அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் .
கல்வி அறிவுள்ள ஊழல் மோசடிகளுடன் தொடர்புபடாத ஏராளமானவர்கள் இம்முறை வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு விண்ணப்பம் செய்துள்ளார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் தேர்தலுக்கான தொகுதிகளின் அமைப்பாளர்களும் இந்த நேர்முக தெரிவின் போது தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்கள் என்றும் பெண்களுக்கான பிரதி நிதித்துவம் தொடர்பிலும் இதன் போது அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் .
இதே நேரம் ஐ.தே.க. யும் தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளதாக சிறிகொதா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை நாட்டில் மும்முனை போட்டி இடம்பெறும் .மஹிந்த தரப்பு ஒரு புதிய கட்சி கொண்ட அணியாகவும் அதிபர் மைத்திரி சுதந்திரக்கட்சி ஒரு அணியாகவும் ஐ.தே.க. ஒரு அணியாகவும் மூன்று அணிகளாக பெரும் சவால் கொண்ட தேர்தலாக அமையப் போகின்றது.
எது எப்படியானாலும் அதிபர் மைத்திரி தலைமையில் உள்ள சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிரிந்த பின்னர்தான் உள்ளூராட்சி தேர்தல் நடை பெறும்.அந்த வகையில்தான் நாமல் MP கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வருட இறுதியில் தேர்தல் நடை பெறவுள்ளது .ஆனால் விரைவில் தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க பிந்தினால் அல்லது இன்னும் தேர்தலை இழுத்தடித்து சென்றால் மஹிந்த தரப்பு நீதி மன்றம் செல்லவுள்ளது .
அதனால் இன்னும் அரசு உள்ளூராட்சி தேர்தலை இழுத்தடித்து செல்லவோ அல்லது நாட்களை கடத்த முடியாதவாறு நீதி மன்றம் ஆணை பிறப்பிக்கும்.
எம்;.எம்;.நிலாம்டீன்